Friday, 8 May 2009
"என் முதல் பதிவு"
சற்றென அள்ளிதெளித்த வெட்பதட்பம் - என் முதல் கோடைமலை. கூட்டமாய் வண்ணத்துபூச்சியின் அத்துமீறல் - என் முதல் பூக்காலம். பேரனாந்த மழலையின் அம்மாச்சொல் - என் முதல் மழலைத்தமிழ். தனைபார்த்த பூமிக்கு வானத்தின் பரிசாய் அழுகை - என் முதல் விவசாய உத்வேகம். சுற்றமே எதிரியாய் என் அன்னை கூட - என் முதல் பள்ளி பயணம். விழியில் பால்வண்ணம், மனதில் குளிர் எண்ணம் - என் முதல் பௌர்ணமி. என் இருவிரல் எண்ணா சோற்றுபருக்கை - என் முதல் சோற்று உணவு. நிகழ்காலமா, எதிர்காலமா, இறந்தகாலமா புரியா! - என் முதல் பருவக்காலம். இவையெல்லாம் சில நொடி தலை தாழ்ந்தது - என் முதல் காதல். அத்துணை படபடப்பை தந்தது - என் முதல் பதிவு!!!
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
இத்தனை எண்ணங்களும் அழகாக இருந்தது, இதை எல்லாம் தலை தாழ்த்திய முதல் காதல் எவ்வளவு அழகாக இருந்துருக்கும்,,,,,,
All the best for your, new born net baby.
Mikka nandri nanba!!
Post a Comment