Friday, 5 June 2009

அ ஆ இ ...


'அ' என்றேன், நான் அழகா என்றாய்!
'ஆ' என்றேன், உனக்கு ஆசையா என்றாய்!
'இ' என்றேன், இதழ் இனிப்பா என்றாய்!
'ஈ' என்றேன், உனக்கு ஈர்ப்பா என்றாய்!
'உ' என்றேன், உயிராய் என்றாய்!
'ஊ' என்றேன், ஊடலாய் என்றாய்!
'எ' என்றாய், எட்டி பிடிக்கவா என்றேன்!
'ஏ' என்றேன், ஏகாந்தம் உனக்கு என்றாய்!
'ஐ' என்றேன், ஐயம் என்றாய்!
'ஒ' என்றாய், நாம் ஒருமை என்றேன்!
'ஓ' என்றேன், ஓசையின்றி என்றாய்!
'ஔ' என்றாய், மௌனம் காத்தேன்!
'ஃ' என்றேன், அஃது இனிதே என்றாய்!!.


தமிழ் புரிந்தாய், காதல் பகிர்ந்தாய்.
காதல்
ஒரு பரிமாணத்தில் புரிதலின் பகிர்வாகும்.
அன்று
உலகம் காதல் நிறம் பெறும்!.

4 comments:

Ananth said...

இருவரின் பகிர்தல் மிகவும் அழகு, பெண்களை புகழாமல் ஆண்கள் மேல் பெண்களுக்கு காதல் வருவதில்லை இது உலக நியதி,,

Unknown said...

dai thambi .. inthe bolgil varum sambavam yaavum karpanaye endru poi solli unmeyanne kavichar aagu ..

Social Network said...

நில்ல சிந்தனை.. ஒரு சிறிய கருது

கடைசி வரில

"முடிச்சிட்டியா" இல்லாமல் "முடிந்துவிட்டதா" என்று இருந்தால் நன்றாக இருக்குமோ என்று தோன்டிறது.( ஏன் என்றால் முதலில் இருந்து கவிதை நயத்துடன் இருந்த வார்த்தைகள் முடிவும் அப்படி இருந்தால் நின்றாக இருந்து இருக்கும் என்று நினைக்குறேன்)..

வாழ்த்துக்கள் .....

Anonymous said...

enda...nan ezhuthuna kavithaiya..nee sutta...thiruttukutty....written by nu en peru podu da...

Post a Comment

Top Tamil Blogs by Tamilers