

தேனோடு சர்க்கரை கலந்திட்டு,
பசுநெய்யோடு பருக்கை அமிழ்ந்திட்டு,
பொங்குமே! என் நாவில் எச்சிலும் கூண்டோடு பொங்குமே!!
வள்ளுவன் இருவரியில் சங்கமித்த கருத்தாய்,
பொங்குமே! அவள் தேன்வாயில் ஊற்றாய் பொங்குமே!!
தலைவாய் திறந்து, இடையிலே மெலிந்து, கடையே குவிழ்ந்து,
மெய்யே பல மை தீட்டிய ஓவிய ஆடை அணிந்து,
நீயும் ஆனாய் , சுவை சேமிக்கும் பொங்கலாழியாய்!!
தலை தொடங்கி, இடை அணைத்து கடை நெருங்கும் மஞ்சள் இஞ்சியும்,
அழகு அது, திருவிளையாடல் ஆடிய என் குல பெண்டிரின் கூந்தல் அது!!
நீவிர் இருவரும் பொங்கும் நேரம், உற்றோரின் சந்தோச நேரம்!!
1 comments:
இதை படிக்கும்போது என்னுடைய மன திரையில் படம் ஓட ஆரம்பித்து விட்டது, டாக்ஸி டாக்ஸி நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி, உன்னுடைய கற்பனை குதிரையில் நானும் இலவசமாக சவாரி செய்கிறேன்.
Post a Comment