
திரு. கவுண்டமணி என்ற ஆசான்
சினிமாவை ஒலிசித்திர வடிவில் ரசித்த அந்த காலத்தின் முதலே, நான் திரு. கவுண்டமணி அவர்களின் நகைச்சுவை வசனங்கள் மற்றும் நடிப்புக்கு இவ்வுலகை மறந்தவன். தொடக்கம் என்னவோ நகைச்சுவை பொருட்டாக இருந்தாலும், பின்னாளில் அவைகள் என் வாழ்க்கைகல்வி எழுச்சிபெற பெரிதும் உதவின. அந்த கந்தர்வ குரலால், குசும்பையும் நக்கல் நய்யாண்டியையும் திறம்பட கலந்து, வெள்ளித்திரையில் நகைச்சுவை விருந்தே படைப்பார். அத்தகைய விருந்தில் ஆங்காங்கே சமுதாயத்திற்கான கருத்துகள் மிகுந்தே இருக்கும். ஒரு படைப்பாளியின் வெற்றி அவன் கருத்துகளினால் அறியபடுவதில்லை மாறாக அவை எத்தனை வீரியத்துடன் மக்களை சென்றடைகிறதோ அதனூடே அறியப்படும். அத்தகைய வழியில் எம் குல நடிகர், ஒரு படைப்பாளி.
அவர் நடிகரென்றால் வெறும் ஊடகம் தானே, அவரை இயக்கியவன் விடுத்து இவரை மிகைபடுத்துவது நல்லதா?, ஐயம் ஏற்படும்!. நான் சொல்வேன், கண்டிப்பாக இல்லை. அரிசி, உப்பு, புளி யாரோ எங்கோ விளைவித்தாலும், அதை வாங்கி பக்குவமாக தன் பிள்ளைகளுக்கு சமைத்து போடும் என் அன்னை தான் எமக்கு மிகைமை. எத்துனை திரைப்பட எழுத்தாளர்கள், இயக்குனர்கள் அவர் பின்னால் இருந்தாலும், எனக்கு அவற்றை சாரம் குறையாமல் நான் ரசிக்கும்படி எனக்களித்தவர் கவுண்டர் தான் மிகைமை. அத்தகைய பங்களிப்பில் குறிப்பிடும்படியான சிலவற்றை பதிவதில் எனக்கு சுயநலமும் உண்டு. உங்கள் புண்ணியத்தில் நானும் இன்னொரு முறை ரசிக்கிறேன்.
அமெரிக்க, ஜெர்மானிய மற்றும் ஜப்பானியத்தை பற்றி நான் பரிட்சியமானதே இவரின் வசனங்களால் தான். நிறைய திரைபடங்களில் இத்தகைய வளர்ந்த நாடுகளின் முன்னேற்ற உக்திகளை தன் நகைச்சுவை வசனவாயிலாக பறை சாற்றுவார். இன்று பலராலும் ஏற்றுகொள்ளப்பட்ட சுயதொழில் வெற்றி ரகசியமும் இவரின் நகைச்சுவையில் உண்டு. ஒருவன் தொழில் தொடங்கும்போது , ஒரு தொழில் செய்யவேண்டும் , பல தொழில் செய்தால் தோல்வி அதிகமென்று சொன்ன இவரின் படைப்பு, சிரித்து சிந்திக்க வைத்தது!.
அரசியல்வாதிகளின் பந்தா பேர்வளிதனத்தை மேடை ஏற்றியவர் இவர் தான். காதல், வெட்கம், இவற்றை நகைச்சுவையாக சத்யராஜ் மற்றும் மணிவன்னுடன் கைகோர்த்து செய்த ஆர்ப்பாட்டங்கள் ஏராளம்!.
ஆசானின் சிந்தனைகள் என்றைக்குமே பத்து ஆண்டுகள் முன்னோக்கியே பயணப்படும் இயல்புடையது!.
ஆசானின் சிந்தனைகள் என்றைக்குமே பத்து ஆண்டுகள் முன்னோக்கியே பயணப்படும் இயல்புடையது!.
இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம், இதோடு இந்த பதிவின் முதல் பகுதியை முடிக்கிறேன்.
5 comments:
Nandru..Oru siru thirutham..
In last para,instead of Vekkam it shud b Vetkam.
adrasakka.... adrasakka .... adrasakka.. addrraasakka..prabhu oru dayonora colr tv,...ethana inchungo...18 ah 20 ah.... adangoniya...superbu...kozhi kuruda irunthaalum kozhambu rusi ah irukan nu thaan paarkanum!
namma thalaya pathi ezhuthanathuku..romba thanx machi...
evuganai thaangi sellum vimanam pol irukiraai prabhu.....
Meenu avargale, mikka nandri. Ungal thirutham etrukollapattadhu. Mikka nandri!! :)
நாம் யோசிக்க தவறிய பல விஷயங்களை(சிந்தனை மிக்க கருத்துக்களை ), நகைச்சுவையாக மக்களிடம் கொண்டு சேர்த்த ஒரு புத்திசாலி.... கவுண்டமணி இன் குசும்பு வார்த்தைகள் அடுத்த பதிவுகளில் வருமா?? நகைச்சுவையை மீண்டும் எனக்கு அறிமுக படுத்திய என் நண்பனுக்கு வாழ்த்துக்கள், உன் சேவை பல வடிவங்களில் எல்லோருக்கும் தேவை மாம்ஸ்..
Post a Comment